முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவிலிருந்து வெகு விரைவில் அமெரிக்கப் படை வெளியேறும்

வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: சிரியாவிலிருந்து வெகு விரைவில் அமெரிக்கப் படை வெளியேறும் என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் இதுகுறித்து டிரம்ப் பேசும்போது, ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றியை நெருங்கி விட்டது. ஐ.எஸ்.ஸுக்கு எதிரான போரில் அமெரிக்கா வெற்றி அடைந்தவுடன் கூடிய விரைவில் அமெரிக்கப் படைகள் சிரியாவிலிருந்து வெளியேறும். அதன் பின்னர் பிற நாட்டினர் சிரியாவை கவனித்துக் கொள்வார்கள். நாங்கள் விரைவில் வெளியேறி விடுவோம். எங்கள் நாட்டுக்கு திரும்ப இருக்கிறோம் என்றார்.

சிரியாவில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட அமெரிக்கா ராணுவ வீரர்கள் குர்தீஷ் மற்றும் அரபுப் படைகளுடன் இணைந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தீவிரம் அடைந்து வரும் சிரியா போரில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு கவுட்டாவின் பெரும் பகுதியை சிரியா அரசுப் படைகள் கைப்பற்றி விட்டன. இந்தச் சண்டையில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். ஐ. நா. சார்பில் 30 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும் கிளர்ச்சியாளர்கள், சிரிய அரசு என்று இரு தரப்பிலும் போர் நிறுத்தம் மீறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து