முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெஸ்ட் இண்டீஸ் டாப் வீரர்கள் பாக். செல்ல மறுப்பு - தமிழருக்கு வாய்ப்பு

வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

கரீபியன்: பாகிஸ்தான் சென்று விளையாட முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மறுத்துவிட்டதால், இளம் அணியை அந்நாட்டுக்கு அனுப்பியுள்ளது வெஸ்ட் இண்டீஸ். அதில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த வீரர் ஒருவரும் இடம்பெற்றுள்ளார்.

பயங்கரவாதிகள்...
பாகிஸ்தானில் இலங்கை கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடிய போது, பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இலங்கை வீரர்கள் ஜெயவர்த்தனே, சங்ககாரா உட்பட 7 பேர் காயமடைந்தனர். பாகிஸ்தான் பாதுகாப்புப் படையை சேர்ந்த 7 பேர் பலியாயினர். இந்தச் சம்பவம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.  இதையடுத்து பாதுகாப்புப் பிரச்னைகளை காரணம் காட்டி, மற்ற நாடுகள் அங்கு சென்று கிரிக்கெட் விளையாட மறுத் துவருகின்றன. ஜிம்பாப்வே அணி மட்டும் அங்கு விளையாடியது. சமீபத்தில் அங்கு சென்ற இலங்கை அணியில் கூட முன்னணி வீரர்கள் கலந்து கொள்ளவில்லை.

முன்னணி வீரர்கள் விலகல்
’தங்கள் நாட்டில் பாதுகாப்பு பிரச்னை ஏதும் இல்லை’ என்று நம்ப வைக்க பாகிஸ்தான் தொடர்ந்து முயன்று வருகிறது.  இந்நிலையில் பாகிஸ்தானில் மூன்று டி20 போட்டிகளில் விளையாட, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்திருந்தது. அதன்படி, வரும் 1-ம் தேதி முதல் 3-ம் தேதி வரை மூன்று டி-20 போட்டிகள் கராச்சியில் நடத்தப்பட இருக்கிறது. இதற்கான அணியை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அதில், பாதுகாப்பு பிரச்னைகளை காரணம் காட்டி முன்னணி வீரர்களான கிறிஸ் கெய்ல், ஜேசன் ஹோல்டர், தேவேந்திர பிஷூ ஆகியோர் விலகியுள்ளனர்.

இரண்டாம் கட்ட...
இரண்டாம் கட்ட இளம் வீரர்களை, ஜேசன் முகமது தலைமையில் அந்நாடு பாகிஸ்தானுக்கு அனுப்பியுள்ளது. இதில் ஆண்ட்ரே மேக்கர்த்தி, ஓடியன் ஸ்மித் ஆகிய புதுமுகங்களும் இடம்பெற்றுள்ளனர். மேலும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த வீராசாமி பெருமாள் என்ற வீரரும் இடம்பெற்றுள்ளார். இவர் ஏற்கனவே சில சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளார். இப்போது அணிக்கு மீண்டும் திரும்பியுள்ளார்.

அணி விவரம்:
ஜேசன் முமகது (கேப்டன்), சாமுவேல் பத்ரி, ராயட் எம்ரிட், பிளட்சர், மேக்கர்த்தி, கீமோ பால், வீராசாமி பெருமாள், பாவெல், தினேஷ் ராம்தின், சாமுவேல்ஸ், ஓடியன் ஸ்மித், சட்விக் வால்டன், கேஸ்ரிக் வில்லியம்ஸ்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து