முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஸ்மித் இடத்திற்கு மாற்றாக தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் கிளாசனை விரும்பும் ராஜஸ்தான்

வெள்ளிக்கிழமை, 30 மார்ச் 2018      விளையாட்டு
Image Unavailable

மும்பை: ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித்திற்குப் பதிலாக தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பர் ஹெய்ன்ரிச் கிளாசனை எடுக்க விரும்புகிறது ராஜஸ்தான் ராயல்ஸ்.

ஒப்புக்கொண்டார்...
கேப்டவுன் நியூலேண்டில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான 3-வது டெஸ்டில் ஆஸ்திரேலியா தொடக்க வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெள்ளத்தெளிவாக தெரிந்தது. பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தனக்குத் தெரியும் என்று ஸ்மித் குற்றத்தை ஒப்புக்கொண்டார். வார்னர்தான் இதற்கு மூளையாக இருந்தார் என்பது தெரியவந்து.

இதனால் ஸ்மித், வார்னருக்கு கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஓராண்டு தடை விதித்துள்ளது. இதனால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து ஸ்மித்தும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கேப்டனாக இருந்து வார்னரும் தங்களது பதவியை ராஜினாமா செய்தார்கள். அத்துடன் இருவருக்கும் தடைவிதிக்கப்பட்டது.

ஹெய்ன்ரிச் கிளாசன்...
இதனால் முக்கியமான வீரர்களை இழந்துள்ள இரண்டு அணிகளும் தரமான வீரர்களை கொண்டு அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்று நினைக்கிறது. தற்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தென்ஆப்பிரிக்கா விக்கெட் கீப்பரான ஹெய்ன்ரிச் கிளாசனை ஸ்மித்திற்குப் பதிலாக சேர்க்க விரும்புகிறது. தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி விக்கெட் கீப்பரான குயின்டான் டி காக் காயம் காரணமாக இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகினார். அவருக்கு மாற்று விக்கெட் கீப்பராக இணைந்தவர்தான் கிளாசன்.

அதிக நம்பிக்கை....
இந்தியாவிற்கு எதிராக நான்கு ஒருநாள் போட்டியில் 110 ரன்கள் அடித்தார். 3 டி20 போட்டியில் 92 ரன்கள் அடித்தார். 2-வது டி20 போட்டியில் 69 ரன்கள் அடித்தார். இந்த போட்டியில் இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான சாஹல் பந்தை நேர்த்தியாக எதிர்கொண்டார். பந்தை சிக்சருக்கும் பவுண்டரிக்கும் விரட்டினார். ஐபிஎல் தொடரில் சுழற்பந்து வீச்சு முக்கிய பங்காற்றும். சாஹல் பந்தை சிறப்பாக எதிர்கொண்டதால், கிளாசன் மீது ராஜஸ்தான் அணிக்கு அதிக நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து