முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நண்பர்கள், ஆசிரியர்களை சந்தித்த மலாலா கண்ணீர்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பெஷாவர்: பாகிஸ்தானின் அழகிய ஸ்வாத் பள்ளத்தாக்கில் உள்ள மின்கோராவின் மக்கான் பாக் பகுதியைச் சேர்ந்தவர் மலாலா யூசப்ஸாய் (20). பெண் கல்வியை வலியுறுத்தியதால் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மலாலா மீது தலிபான் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார். பின்னர் லண்டன் நகரில் தீவிர சிகிச்சை பெற்று உயிர் பிழைத்தார். அதன் பிறகு அங்கேயே தங்கி விட்டார்.

5 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாடான பாகிஸ்தானுக்கு 4 நாள் பயணமாக கடந்த வியாழக்கிழமை மலாலா வந்தார்.

இந்நிலையில், ஸ்வாத் பள்ளத்தாக்கில் தான் பிறந்து வளர்ந்த சொந்த ஊருக்கு பெற்றோருடன் நேற்று சென்ற மலாலா, உறவினர்கள், அக்கம் பக்கத்தினர், பள்ளி நண்பர்கள், ஆசிரியர்களைச் சந்தித்தார். அப்போது மகிழ்ச்சிப் பெருக்கில் கண்ணீர் விட்டார்.

முன்னதாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் மலாலா கூறும்போது, என்னுடைய நாடு, என்னுடைய மதத்தை நினைத்து பெருமைப்படுகிறேன். இதற்கு முன்னர் நான் இவ்வளவு மகிழ்ச்சியாக எப்போதும் இருந்ததில்லை. இவ்வளவு உணர்ச்சிவசப்பட்டதில்லை. பாகிஸ்தானில் எல்லா விஷயங்களையும் நான் இழக்கிறேன் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து