முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் நாளை ரஷ்யா செல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

மாஸ்கோ: இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரஷ்யாவுக்கு நாளை 3-ம் தேதி சுற்றுப்பயணமாக செல்கிறார்.

சர்வதேச பாதுகாப்புத் தொடர்பான 7ஆவது மாஸ்கோ மாநாடு, ரஷிய தலைநகர் மாஸ்கோவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளவுள்ளார். இதுகுறித்து மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கூறியதாவது,

நாளை 3ஆம் தேதி முதல் நிர்மலா சீதாராமன், ரஷியாவில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் செய்கிறார். இந்த பயணத்தின்போது, சர்வதேச பாதுகாப்புத் தொடர்பான மாஸ்கோ மாநாட்டில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார்.

ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜி சொய்குவை நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். இதேபோல், மேலும் பல ரஷ்ய தலைவர்களையும் நிர்மலா சீதாராமன் சந்தித்துப் பேசவுள்ளார்.

இந்தியா-ரஷியா நாடுகள் இடையே உயர்மட்ட அளவில் நடைபெறும் ஆலோசனைகளை தொடர்ந்து பராமரிக்க இந்த பயணம் உதவியாக இருக்கும். இரு நாடுகளுக்கும் இடையே ராணுவ தொழில்நுட்ப ஒத்துழைப்பில் நிலவும் உறவை வலுப்படுத்தவும் இந்த பயணம் உதவியாக இருக்கும் என்று இந்திய தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்திய பாதுகாப்புத் துறை அமைச்சராக நிர்மலா சீதாராமன் பதவியேற்ற பிறகு, ரஷ்யாவுக்கு செல்வது இதுவே முதல் முறையாகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து