முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதரவற்ற ஏழை மூதாட்டியின் வீட்டிற்கு சென்று உணவளித்து உணவருந்தி மாதாந்திர உதவித்தொகை கரூர் மாவட்ட கலெக்டர் த.அன்பழகன் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை, 1 ஏப்ரல் 2018      கரூர்
Image Unavailable

கரூர் மாவட்ட கலெக்டர் த.அன்பழகன், தனக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கரூர் மாவட்ட சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சார்ந்த ராக்கம்மாள் என்ற ஏழை மூதாட்டியுடன் உணவருந்தி மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணை வழங்க உத்தரவிட்டார்.

உதவித்தொகை

கரூர் வட்டம் சின்னமநாயக்கன்பட்டி கிராமத்தை சார்ந்த ஆதரவற்ற ஏழை மூதாட்டி ராக்கம்மாள் வயது 80 என்ற மூதாட்டி வறுமை சூழலில் தவிப்பதை ஊர் மக்கள் மூலம் தகவலறிந்த மாவட்ட கலெக்டர் அந்த பகுதியில் மூக்கணாங்குறிச்சி கிராமத்தில் மனுநீதி நாள் முகாமிற்கு சென்றிருந்த போது தனது வீட்டில் சமைத்த உணவை எடுத்துச் சென்று அந்த மூதாட்டியார் வீட்டில் அமர்ந்து மூதாட்டியாருக்கு உணவளித்து தானும் அமர்ந்து உணவு உட்கொண்டார்.

பின்னர் அந்த மூதாட்டியின் வறுமை நிலையில் நேரில் கண்டுணர்ந்து வந்திருப்பது கலெக்டர் என்பதை கூட அறிய இயலாத நிலையுணர்ந்து உடனடியாக தமிழக அரசு வழங்கும் முதியோர் உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளை வழங்கி உடனடியாக உதவிட ஏதுவாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டு மூதாட்டியிடம் ஆறுதல் கூறினார்.

இது குறித்து மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: முதுமை நிலையில் உடலுழைப்பு செய்து பிழைப்பு நடத்த இயலாத ஏழை எளிய மக்களுக்கு தமிழக அரசு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்குகிறது. இத்திட்டத்தின் நோக்கம் முழுமையாக நிறைவேற தக்க வகையில் மாவட்டம் முழுவதும் தகுதி வாய்ந்த நபர்களுக்கு உடன் வழங்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் பணியாற்றும் என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து