முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்: சிறிசேனா ஆதரவு அளிப்பார் ராஜபக்சே நம்பிக்கை

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

கொழும்பு, இலங்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக கொண்டுவரப்பட உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு அதிபர் மைத்ரிபால சிறிசேனா ஆதரவளிப்பார் என முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இலங்கை சுதந்திர கட்சியின் (எஸ்எல்எப்பி) ராஜபக்ச தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தவர் சிறிசேனா. 2015-ல் பதவி விலகிய சிறிசேனா, ஐக்கிய தேசிய கட்சியின் ரணில் விக்கிரமசிங்கேவுடன் இணைந்து அதிபர் தேர்தலை சந்தித்தார். இதில் ராஜபக்சே தோல்வி அடைந்தார். சிறிசேனா அதிபரானார். ரணில் பிரதமரானார்.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் கட்சிகள் தோல்வி அடைந்தன. ராஜபக்சே தொடங்கிய புதிய கட்சி (இலங்கை மக்கள் முன்னணி) அமோக வெற்றி பெற்றது.

இதையடுத்து ரணில் பதவி விலக வேண்டும் என ராஜபக்சே தலைமையிலான எதிர்க்கட்சிகள் கோரி வருகின்றன. அதிபர் சிறிசேனாவும் ரணிலை பதவி விலகுமாறு கேட்டுக்கொண்டார். இந்தக் கோரிக்கையை ரணில் நிராகரித்துவிட்டார்.

இந்நிலையில் சமீபத்தில் கண்டி மாவட்டத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தை கட்டுப்படுத்தத் தவறி விட்டதாகவும் ரணில் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன்படி வரும் 4-ம் தேதி நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்படும் எனத் தெரிகிறது.
இதுகுறித்து ராஜபக்சே நேற்று கூறியபோது, “பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ளோம். இந்தத் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எஸ்எல்எப்பி கட்சி உறுப்பினர்களுக்கு சிறிசேனா உத்தரவிடுவார் என நம்புகிறேன்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து