முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தலித்துகள் போராட்டம் எதிரொலி: கர்நாடக சுற்றுப்பயணத்தை ஒத்தி வைத்தார் அமித்ஷா

திங்கட்கிழமை, 2 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி : சுப்ரீம் கோர்ட்டின் சமீபத்திய தீர்ப்பையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுக்க தலித் ஜாதியினரின் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தலித் அமைப்புகள் பாரத் பந்த்துக்கும் அழைப்பு விடுத்துள்ளன. இதனிடையே, பா.ஜ.க தலைவர் அமித் ஷா கர்நாடகாவில் மேற்கொள்ளவிருந்த தனது இரண்டு நாள் பிரச்சார பயணத்தை ஒத்தி வைத்துள்ளார்.

கர்நாடகாவில் கணிசமாக தலித் சமூகத்தினர் உள்ளனர். வழக்கமாக இவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக வாக்களிப்பவர்கள். கடந்த இரு தேர்தல்களில் தலித்துகளின் கணிசமான வாக்குகளை பா.ஜ.க பெறத் தொடங்கியது.

இந்த நிலையில், அமித்ஷா தலித்துகளை சமாதானப்படுத்தி விட்டே கர்நாடகா பக்கம் தலை வைப்பார் என தெரிகிறது. லோக்சபா எம்.பி. அனந்த்குமார் ஹெக்டே, தலித்துகள் பற்றி மோசமாக கூறிய வார்த்தைக்காக கர்நாடகாவில் ஒரு பொதுக்கூட்டத்தில் அமித்ஷா மன்னிப்பு கேட்டது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து