முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொலிவியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 6.8 ஆக ரிக்டரில் பதிவு

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பொலிவியா: தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் பராகுவே எல்லை ஓரத்தில் 562 கிலோ மீட்டர் ஆழத்திற்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியது. இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள் நாட்டின் பல இடங்களில் உணரப்பட்டுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அலுவலகங்கள், வணிக வளாகங்கள், வீடுகளிலிருந்து வெளியேறி சாலைக்கு ஓடி வந்ததாகவும். பொலிவியாவில் சமீபத்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் இதுதான் என்றும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் ஏதும் இதுவரை வெளிவரவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து