முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லையில் சீனாவை சீண்டினால் இந்தியாவுடனான நட்பு பாதிக்கப்படும் சீன ஆராய்ச்சியாளர் சொல்கிறார்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

ஷாங்காய்: எல்லைப் பகுதியில் சீனாவை சீண்டும் வகையில் இந்தியா ராணுவக் குவிப்பில் ஈடுபட்டு ஆத்திரமூட்டினால் அந்நாட்டுடனான நட்புறவும், பரஸ்பர நம்பிக்கையும் பாதிக்கப்படும் என்று சீனாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் தெரிவித்தார்.

இமயமலைப் பகுதியில் இந்தியா-சீனா-மியான்மர் எல்லை பகுதி உள்ளது. அங்கு இந்தியா ராணுவக் குவிப்பில் ஈடுபட்டு வருவதாகவும், இதன்மூலம், டோக்லாம் பிரச்சினை போல் மீண்டும் ஒரு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கப்படும் என்று இந்திய ராணுவ உயரதிகாரி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், ஷாங்காய் சர்வதேச கல்வி நிறுவனத்தின் ஆசிய-பசிபிக் ஆராய்ச்சி படிப்புக்கான இயக்குநரும், ஆய்வாளருமான ஷாவ் கங்செங், தி குளோபல் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில்,
சீன எல்லையையொட்டி இந்தியா, ராணுவக் குவிப்பில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணாக, இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பரஸ்பர நம்பிக்கையில் விரிசல் ஏற்படும். ராணுவ விவகாரத்தில் இந்தியா சீண்டும் பட்சத்தில், அது இருநாட்டு ராணுவத்தோடு மட்டும் முடியாது. மாறாக, இந்தப் பிரச்சினை ராஜ்ய ரீதியிலும், பொருளாதார மற்றும் கலாசார ரீதியிலும் எதிரொலிக்கும்.

எல்லையில் ராணுவக் குவிப்பில் ஈடுபட்டு வருவதன்மூலம், அந்தப் பகுதியில் அமைதி நிலவாது என்று இந்தியா எண்ணி வருகிறதோ? என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது என்று ஷாவ் கங்செங் தெரிவித்தார். 

இந்தியா-பூடான்-சீனா ஆகிய நாடுகளின் எல்லைப் பகுதியில் கடந்த ஆண்டு சீன ராணுவம் சாலை அமைக்க முயற்சி செய்தது. இதையடுத்து, பூடான் அரசு இந்தியாவிடம் உதவி கோரியது. அதன் பேரில், அந்தப் பகுதியில் ராணுவத்தை குவித்தது இந்தியா. பதிலடியாக சீனாவும் ராணுவ வீரர்களை அதிகரித்து வந்தது. இதனால் 73 நாட்கள் வரை எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நீடித்தது. அதன்பிறகு ஒரு வழியாக கடந்த ஆகஸ்ட் மாதம் அந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து