முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

4 நாள் சுற்றுப் பயணம் முடித்து லண்டன் திரும்பினார் மலாலா

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

லண்டன்: அமைதிக்கான நோபல் பரிசு பெற்றுள்ள பாகிஸ்தான் பெண் மலாலா, தனது தாய்நாட்டில் 4 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரிட்டன் திரும்பினார்.

கடந்த 2012-ஆம் ஆண்டில், பெண் கல்விக்கு ஆதரவாகப் பேசி வந்த மலாலாவை பள்ளி வாகனத்திலிருந்து இறக்கி, தலிபான் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், தலையில் குண்டு பாய்ந்து உயிருக்குப் போராடிய மலாலா, விமானம் மூலம் பிரிட்டன் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். உலகம் முழுவதும் அதிர்ச்சி அலையை எழுப்பிய இந்தச் சம்பவத்தையடுத்து, மலாலாவுக்கும், அவரது பெற்றோருக்கும் பிரிட்டன் அடைக்கலம் அளித்தது.

இந்தச் சூழலில், மலாலாவுக்கு கடந்த 2014-ம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு இந்தியாவின் சமூக சேவகர் கைலாஷ் சத்யார்த்தியுடன் பகிர்ந்து வழங்கப்பட்டது. அந்த வகையில் மிகவும் இளைய வயதில் நோபல் பரிசு பெற்றவர் என்ற பெருமையையும் மலாலாவுக்குக் கிடைத்தது.

இந்த நிலையில் சுமார் 6 ஆண்டுகள் கழித்து தனது தாய்நாடான பாகிஸ்தானுக்கு மலாலா கடந்த மாதம் 29-ஆம் தேதி பாகிஸ்தானுக்கு சென்றார். மேலும், தாம் பிறந்து வளர்ந்த ஸ்வாத் பள்ளத்தாக்கு பகுதிக்கு சென்ற அவர், படிப்பு முடிந்த பிறகு பாகிஸ்தானில் நிரந்தரமாகத் தங்கியிருக்க திட்டமிட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இந்த நிலையில், 4 நாள் சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு மலாலா பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு  திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக, மலாலா இஸ்லாமாத் விமான நிலையம் வந்திறங்கும் வரை அவரது சுற்றுப் பயணம் குறித்த தகவல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து