முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மலேசியாவில் சர்ச்சைக்குரிய ஊடகச் சட்டம் நிறைவேற்றம்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

கோலாலம்பூர்: மலேசிய நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய ஊடக சட்டம் அனைவரின் எதிர்ப்புகளையும் மீறி நிறைவேற்றப்பட்டது.

மலேசியாவில் அவதூறு செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் வகையில் சட்டம் இயற்ற ஆளும் கட்சி கூட்டணி முடிவெடுத்தது. அதன்படி அந்தப் புதிய சட்டத்தில், பொய் செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு 1.3 லட்சம் டாலர் அபராதம் மற்றும் 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இந்த சட்டத்துக்கு மலேசியாவில் பெரும் எதிர்ப்பு கிளம்பியது. ஊடகங்களின் குரல் வளையை நெறிக்கும் செயல் எனக்கூறி பத்திரிகை அமைப்புகள் போரட்டங்கள் நடத்தின. இந்த நிலையில், கடும் எதிர்ப்புகளையும் மீறி மலேசிய ஆளும் கட்சி அந்த சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. ஆளும் கட்சிக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் இருந்ததையடுத்து இந்த ஊடக சட்டம் எந்தவித எதிர்ப்புகளுமின்றி எளிதாக நிறைவேற்றப்பட்டது.

கண்டனக் குரல்கள் எழுந்ததால், அந்தப் புதிய சட்டத்தில் சிறை தண்டனை மட்டும் 10 ஆண்டுகள் என்பதற்கு பதில், ஆறு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. மலேசியாவில் பிரதமராக பதவி வகிக்கும் நஜீப் ரஸாக் மீது ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மூன்றாவது முறையாக தேர்தலில் ரஸாக் போட்டியிட வசதியாக இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மலேசியாவில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், உள்நாட்டு மற்றும் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் பிரதமரின் ஊழல் குறித்து செய்திகள் வெளியிடுவதை தடுக்கும் வகையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து