முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈராக்கில் கொல்லப்பட்ட இந்தியர்கள் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம்: பிரதமர் மோடி அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஈராக்கில் கடந்த  2014-ல் ஐ.எஸ் பயங்கரவாதிகளால் கடத்தி கொல்லப்பட்ட, 39 இந்தியர்களின் குடும்பத்துக்கு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் கட்டுப்பாட்டில் ஈராக் இருந்த போது, அங்கு வேலை பார்த்து வந்த, 40 இந்திய தொழிலாளர்களை அவர்கள் கடத்திச் சென்றனர். அதில் ஒருவர் மட்டும் உயிர் தப்பி நாடு திரும்பினார். பயங்கரவாதிகள் பிடியில் இருந்த, 39 இந்தியர்களை மீட்பதற்காக மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இந்த நிலையில், அந்த 39 பேரையும் பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றதாகவும், அவர்களுடைய உடல்கள் மோசூல் நகரில் தோண்டி எடுக்கப்பட்டதாகவும், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் அறிவித்தார்.

அதில், 38 பேரின் அடையாளம் காணப்பட்டு, நேற்று முன்தினம் விமானம் மூலம் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒருவரது உடல் மட்டும் அடையாளம் காணப்படவில்லை. இந்த நிலையில், பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட, இந்திய தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து