முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10-ம் வகுப்பு கணிதத்துக்கு மறுதேர்வு நடத்தப்படாது: சி.பி.எஸ்.இ. அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, 10-ம் வகுப்பு கணித தேர்வின் போது கேள்வித்தாள் லீக்கான விவகாரத்தில் டெல்லி, அரியானா மாணவர்களுக்கு மறுதேர்வு இல்லை என்று சி.பி.எஸ்.இ நிர்வாகம் அறிவித்துள்ளது.

சி.பி.எஸ்.சி பொதுத் தேர்வுகள் நாடு முழுவதும் மார்ச் 5-ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்நிலையில், ஒருசில பாடங்களுக்கான வினாத்தாள்கள் இணையதளங்களில் வெளியானதாக குற்றச்சாட்டு எழுந்தது. தலைநகர் டெல்லியில் வாட்ஸ்அப் மூலம் கேள்வித்தாள் பரவியதாகவும் கூறப்பட்டது. 12-ம் வகுப்பு பொருளாதார தேர்வு மற்றும் 10-ம் வகுப்பு கணித தேர்வு பாட வினாத்தாளும் வட மாநிலங்களில் வெளியானது. குறிப்பாக அரியானா மற்றும் டெல்லியில் இதுபோன்று கணித தேர்வுக்கான வினாத்தாள் லீக்கானது.

இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் 10 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணிதத்துக்கான மறுதேர்வு மீண்டும் நடத்தப்படாது என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. இதை மனித வள மேம்பாட்டுத் துறை செயலாளர் அனில் ஸ்வரூப் உறுதிப்படுத்தினார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து