முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாற்காலியில் இருந்து தவறி விழுந்த சித்தராமையாவுக்கு தலையில் காயம்

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

மைசூரு: கர்நாடக மாநிலம் மைசூரில் தேர்தல் பிரசாரத்தின் போது கட்சி தலைவர் வீட்டில் உணவு அருந்த நாற்காலியில் உட்காரந்த போது அதிலிருந்து கீழே விழுந்தார் சித்தராமையா. இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
 
கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் வரும் மே 12-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் பா.ஜ.கவும், காங்கிரசும் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் பிரசாரத்தை நடத்தி வருகின்றன. இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் அவ்வப்போது தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.  அவர் போட்டியிட உள்ள சாமுண்டீஸ்வரி தொகுதியில் 5 நாட்களாக பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில் மாவின்ஹள்ளியில் உள்ள கட்சியின் தலைவர் வீட்டில் உணவு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் கலந்து கொள்ள சித்தராமையா சென்றார். அங்குள்ள பிளாஸ்டிக் நாற்காலியில் அமர்ந்த போது நாற்காலி சரிந்து கீழே விழுந்தார். அப்போது பயங்கர சப்தம் கேட்டதை அடுத்து அனைவரும் வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவருடன் முன்னாள் எம்.எல்.ஏ சத்யநாராயணாவும், நண்பர் எம். சித்தேகவுடாவும் இருந்தனர்.

மருத்துவமனையில் சிகிச்சை சித்தராமையா உட்கார்ந்த பிளாஸ்டிக் நாற்காலி ஏற்கெனவே உடைந்து கிடந்தது தெரியவந்தது. இதையடுத்து தலையில் காயம் அடைந்த அவர் பாதுகாப்பு படையினர் உதவியுடன் அங்கிருந்து அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். மருத்துவ பரிசோதனையில் தலையில் சிறியதாக வெட்டுக் காயம் ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் பிரசாரத்தை முடித்து கொண்டு அவர் பெங்களூர் விரைந்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து