முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொய் செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்கு எதிரான ஆணை: திரும்பப் பெற்றது மத்திய அரசு

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, பொய் செய்தி வெளியிடும் செய்தியாளர்களுக்கு எதிரான ஆணையை மத்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. 

தற்போது உலகம் முழுவதும் பொய்யான செய்திகள் அதிகம் வலம் வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. இது போன்ற செய்திகள் தேர்தல் முடிவுகளில் அதிக பங்கு வகிக்கிறது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த பொய் செய்திகளுக்கு எதிராக சட்டம் இயற்ற மத்திய அரசு ஒரு ஆணை பிறப்பித்து இருந்தது. இதற்கு பல பத்திரிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.  இந்த சட்டத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது என்று அவர்கள் கூறினர். இது தொடர்பாக மத்திய அரசு அறிக்கை ஒன்றை நேற்று வெளியிட்டது. அதன்படி பொய்யான செய்தி வெளியிடும் பத்திரிக்கையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. பொய்யான செய்திகள் வெளியாவதை தடுக்கும் வண்ணம் இந்த அறிக்கை வெளியானது. இதில் 15 நாட்களில் முடிவெடுக்கும் படி அகில இந்திய பத்திரிக்கையாளர் சங்கத்திற்கு கோரிக்கை விடுத்து இருந்தது.

இந்த ஆணையின் படி ஒரு பத்திரிக்கையாளர் பொய்யான செய்தி வெளியிட்டதாக கண்டுபிடிக்கப்பட்டால், அவர் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ பத்திரிக்கை துறையில் வேலை பார்க்க முடியாத நிலை ஏற்படும். மேலும் அரசு நிகழ்வுகள் குறித்த செய்திகள், அமைச்சர்களை பார்ப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட முடியாமல் போய்விடும். இன்னும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். மத்திய அரசின் இந்த ஆணைக்கு பல கட்சிகள், இயக்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தன. இந்த நிலையில் 24 மணி நேரத்திற்குள் இந்த ஆணை திரும்ப பெறப்பட்டு இருக்கிறது. பிரதமர் மோடி இந்த ஆணையை திரும்ப பெறுவதாக அறிவித்து உள்ளார். பல தரப்பில் இருந்து எதிர்ப்பு வந்த காரணத்தால் இந்த ஆணையை பிரதமர் திரும்ப பெற்று உள்ளார் என்று கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து