முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் டிரா: தொடரை கைப்பற்றியது நியூசிலாந்து

செவ்வாய்க்கிழமை, 3 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

கிறிஸ்ட்சர்ச் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வீரர் சோதியின் சிறப்பான தடுப்பாட்டத்தால் போட்டி டிராவில் முடிந்தது. எனவே, நியூசிலாந்து தொடரை கைப்பற்றி உள்ளது.

352 ரன்களுக்கு ‘டிக்ளேர்’

நியூசிலாந்து- இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்டில் நியூசிலாந்து வெற்றி பெற்று இருந்தது. 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கிறிஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 307 ரன்களும், நியூசிலாந்து 278 ரன்களும் சேர்த்தன. 29 ரன்கள் முன்னிலையில் ஆடிய இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 352 ரன் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. இதனால் நியூசிலாந்து வெற்றிக்கு 382 ரன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

கடைசி நாள் ஆட்டம்

இந்த இலக்குடன் ஆடிய நியூசிலாந்து 4-வது நாள் ஆட்டத்தின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 42 ரன் எடுத்து இருந்தது. நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 340 ரன் தேவை, கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் நியூசிலாந்து தொடர்ந்து விளையாடியது. ஆனால், இங்கிலாந்து வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் நியூசிலாந்து விக்கெட்டுகளை இழந்து திணறியது. 219 ரன்னில் 7 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் லாதம் 83 ரன்னும், கிராண்ட்ஹோம் 45 ரன்னும் எடுத்தனர்.

கடும் போராட்டம்

முன்னணி வீரர்கள் வெளியேறிய நிலையில் சோதி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். அவரது விக்கெட்டை மட்டும் எப்படியாவது எடுத்து விட வேண்டும் என்று இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடினர். ஆனால் அவர்களது முயற்சி பலன் அளிக்கவில்லை. 5-ம் நாள் ஆட்ட நேர முடிவில் நியூசிலாந்து அணி, 8 விக்கெட் இழப்பிற்கு 256 ரன்கள் சேர்த்தது. இதனால் போட்டி டிராவில் முடிந்தது. சோதி 168 பந்துகளை சந்தித்து 56 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பிராட், மார்க்வுட், ஜேக் லிச் தலா 2 விக்கெட் எடுத்தனர்.
முதல் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றதால், தொடரை 1-0 என கைப்பற்றியது. கடைசி போட்டியின் ஆட்டநாயகனாக டிம் சவுத்தி தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை டிரென்ட் போல்ட் தட்டிச் சென்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து