முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் மட்டும் 139 பயங்கரவாத அமைப்புகள் ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் பட்டியல்

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்: பாகிஸ்தானில் இருந்து மட்டும் 139 பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் ஐ.நா பாதுகாப்பு சபையின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாவூத் இப்ராஹிம்...
ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத மற்றும் கிளர்ச்சி இயக்கங்கள் குறித்த பட்டியல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தானில் இருந்து மட்டும் 139 பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். ஒசாமா பின்லேடனின் வாரிசு அய்மன் அல்-ஸவாகிரி, லஷ்கர் இ தாய்பா தலைவர் ஹபீஸ் சயீது, இந்தியாவால் தேடப்படும் தாவூத் இப்ராஹிம் ஆகியோர் பாகிஸ்தானில் வாழ்ந்து வருவதாக பட்டியலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லஷ்கர் இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் ஹாஜி முகம்மது, அப்துல் சலாம், ஸபார் இக்பால் ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

முக்கிய தளபதிகள்...
பாகிஸ்தானில் இருந்து கொண்டு ஆப்கானிஸ்தானில் பல தாக்குதல்களை நடத்தும் பல்வேறு குழுக்கள் இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ளன. பயங்கரவாத மற்றும் கிளர்ச்சி இயங்களில் உள்ள முக்கிய தளபதிகளும் இந்த பட்டியலில் உள்ளனர். எனினும், உலகம் முழுவதும் இருந்து எத்தனை இயக்கங்கள் இடம்பெற்றுள்ளன என்ற தகவல்கள் வெளியாகவில்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து