முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெற்று தருவோம் - சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி உறுதி

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

காவிரி நீர் பிரச்சினையில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெற்று தருவோம் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீண்டும் தெரிவித்துள்ளார்.
 
காவிரி நீர் பிரச்சினையில் மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.ஆளும் அ.தி.மு.க சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் முதல்வரும், துணை முதல்வரும் பங்கேற்றிருந்தனர்.

கேள்வி எழுப்பினர்...

இந்நிலையில் தமிழக அரசு வழக்கறிஞர் உமாபதி மற்றொரு வழக்குக்காக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வின் முன்பு ஆஜராகி இருந்தார். தமிழக அரசு வழக்கறிஞரை கண்டு கொண்ட தலைமை நீதிபதி, என்னதான் நடக்கிறது தமிழ்நாட்டில், ஏன் அனைத்து இடங்களிலும் போராட்டம் நடக்கிறது என கேள்வி எழுப்பினார். மக்களும் தமிழக கட்சிகளும் போராட்டத்தை கைவிட வேண்டும். தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பவும், அமைதியை நிலைநாட்ட வேண்டும் என கூறினார்.

உரிய உத்தரவு...

அதோடு “ வரும் திங்கள் கிழமை வழக்கு தொடர்பான விசாரணை மேற்கொள்ளப்படும் எனவும் அன்றைய தினம் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும், தமிழகத்துக்கு தேவையான தண்ணீரை சுப்ரீம் கோர்ட் பெற்றுத்தரும் எனவும் உறுதியளித்தார். அதற்கு பதிலளித்த தமிழக வழக்கறிஞர் ”சுப்ரீம் கோர்ட்டின் கருத்துகளை தமிழக அரசுக்கு தெரிவித்து , சட்டம் ஒழுங்கை காப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து