முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வங்கிகளில் 2.41 லட்சம் கோடி கடன் தள்ளுபடி: மத்திய அரசின் அறிவிப்புக்கு மம்தா பானர்ஜி கண்டனம்

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: கடந்த 3 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் பெறப்பட்ட ரூ.2.41 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா விமர்சனம் செய்துள்ளார்.

கடன் தள்ளுபடி
பாராளுமன்றத்தில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் ஷிவ் பிரதாப் சுக்லா எழுத்துப்பூர்வமாக அளித்துஉள்ள பதிலில் 2014 ஏப்ரல் முதல் 2017 செப்டம்பர் வரையில் பொதுத்துறை வங்கிகளில் ரூ.2.41 லட்சம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது. செயல்பாடற்ற சொத்துக்களின் மீதான கடன்கள் அல்லது பல காலமாக திருப்பி செலுத்தப்படாத கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரப்படி தள்ளுபடி செய்யப்பட்ட கடன்களின் தொகை ரூ. 2,41,911 கோடியாகும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும் கடனாளர்கள் தங்களுடைய கடனை திருப்பி செலுத்த வேண்டிய பொறுப்பு உள்ளது எனவும் குறிப்பிட்டார்.

அதிர்ச்சியளிக்கிறது...
மத்திய அரசு வெளிப்படுத்தி உள்ள தகவலுக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியிடம் இருந்து கடும் விமர்சனம் எழுந்து உள்ளது. “தேசத்தில் விவசாயிகள் வங்கி கடன் காரணமாக கதறுகிறார்கள், தற்கொலை செய்கிறார்கள் மற்றும் தொடர்ந்து விவசாய கடனை தள்ளுபடி செய்யுங்கள் என கோரிக்கை விடுத்துவருகிறார்கள். ஆனால் மத்திய அரசு அதனை கருத்தில் எடுத்துக்கொள்ளாத நிலையில் இதுபோன்ற தகவலை பார்ப்பது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது,” என மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கூறிஉள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து