முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தூய்மை பாரத இயக்க திட்டப்பணிகள் குறித்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      விழுப்புரம்

விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பாக, தூய்மை பாரத இயக்க திட்டப்பணிகள் குறித்து, அனைத்துறை அலுவலர்களுடன் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் இல.சுப்பிரமணியன், தலைமையில் நடைபெற்றது.

ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

விழுப்புரம் மாவட்டத்தினை திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக 30.04.2018 அன்றைய தேதியில் அறிவிப்பு செய்யும் பொருட்டு அனைத்துத் துறை அலுவலர்களையும் ஒருங்கிணைத்து, ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஒவ்வொரு துறையும், மாவட்டத்தினை திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுறுத்தினார். மாணவர்கள் நோயுற்று, உயரம் குன்றியும், இருப்பதற்கு திறந்தவெளியில் காலனி அணியாமல் மலம் கழிப்பது முக்கிய காரணமாக உள்ளது. எனவே தலைமை ஆசிரியரும், வகுப்பு ஆசிரியர்களும் தினம்தோறும் வீட்டில் கழிப்பறை கட்டி அதனை பயன்படுத்திட மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகள், கர்ப்பிணி தாய்மார்களிடம் கழிப்பறை கட்டி பயன்படுத்திடவும், பள்ளிகளில் சுகாதார முகாம் அமைக்கவும், சுடீளுமுஇ ஆழடிடைந வநயஅ-ல் செல்லும் கிராம சுகாதார செவிலியர்கள் கழிப்பறை பயன்பாட்டின் அவசியத்தை பொதுமக்களிடமும், மாணவர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த சுகாதார துறைக்கு அறிவுரை வழங்கினார். அங்கன்வாடிக்கு பயில வரும் குழந்தைகள் கழிப்பறை பயன்படுத்துவதை பழக்கப்படுத்திடவும், கழிப்பறை இல்லாத குழந்தைகளின் பெற்றோர்களிடம் கடிதம் பெற்று அதனை ஊராட்சி செயலரிடம் வழங்கிடவும், அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகள் சலவை செய்த துணிகளை உடுத்தி அனுப்பிட, குழந்தைகளின் பெற்றோர்களிடம் அறிவுரை வழங்க வேண்டும். கல்வித்துறை உயர் அலுவலர்கள், ஊராட்சி துறையின் மண்டல அலுவலர்கள், ஊராட்சிக்கு செல்லும் போது பள்ளிக்கழிப்பறை பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்திட வேண்டும்.  எனவே, அனைத்துத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு விழுப்புரம் மாவட்டத்தினை எதிர்வரும் 30.04.2018-ல் திறந்தவெளியில் மலம் கழித்தலற்ற மாவட்டமாக மாற்றிட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென கலெக்டர் இல.சுப்பிரமணியன், தெரிவித்தார்.

 இக்கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன், மகளிர் திட்ட அலுவலர் சுந்தராஜன், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர்கள் ராஜா, சுந்தரேசன், துணை இயக்குநர்கள் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சவுண்டம்மாள், டாக்டர்.ஜெமினி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து