முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அஃப்ரிதியின் ட்வீட்டுக்கு காம்பீர், கோலி பதிலடி

புதன்கிழமை, 4 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

காஷ்மீர் குறித்து ட்விட்டரில் சர்ச்சைக்குறிய வகையில் கருத்துகளை பதிவிட்ட பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷாகித் அஃப்ரிதியை விளாசித்தள்ளியுள்ளார் இந்திய வீரர் கவுதம் காம்பீர்.  அப்படி ட்விட்டரில் என்ன சொன்னார் அஃப்ரிதி, அந்தப் பதிவு இதோ 'இந்தியா ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியில் வருத்தமளிக்கும் வகையிலும், அபாயகரமான வகையிலும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. சுய உறுதி மற்றும் சுதந்திரத்துக்காகப் போராட்டம் நடத்தி வருபவர்களின் குரலை ஒடுக்க அவர்கள் துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிகழ்வுகளைத் தடுக்க ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது ஆச்சர்யமளிக்கிறது’ என்று அஃப்ரிடி பதிவிட்டிருந்தார்.

இந்த ட்விட்டர் பதிவுக்கு பதிலளித்த இந்தியக் கவுதம் காம்பீர் `நமது காஷ்மீர் தொடர்பாக ஷாகித் அஃப்ரிதி பதிவிட்டது குறித்து என்னிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில் கருத்துக் கூற என்ன இருக்கிறது?. அவர் ஐக்கிய நாடுகள் சபை (UN) குறித்து பேசுகிறார். அவரது அகராதியில் யு.என். என்பதற்கு அண்டர் நைண்டீன் (19 வயதிற்குட்பட்ட) என்பதே பொருள். ஊடகங்கள் இதுகுறித்துக் கவலைப்படத் தேவையில்லை. அஃப்ரிதி நோ பாலில் விக்கெட் வீழ்ந்ததைக் கொண்டாடுகிறார்’ என்று பதிலடி கொடுத்துள்ளார். 

விராத் கோலியும் சும்மா இருக்கவில்லை, அப்ரிதியின் கருத்துக்கு ட்விட்டரில் ' ஒரு சின்ன திருத்தம். அது என்ன இந்தியா ஆக்கரமித்துள்ள காஷ்மீர் ?  காஷ்மீர் இப்போதும் எப்போதும் இந்தியாவின் ஒரு அங்கம்தான்' என தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.    

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து