முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரஷ்யாவிடம் என்னை விட கடுமையாக நடந்து கொண்டவர்கள் யாரும் இல்லை அதிபர் டிரம்ப் சொல்கிறார்

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் என்னைவிட கடுமையாக நடந்து கொண்டவர்கள் யாரும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து  தலைவர்களுடனான சந்திப்பில் டிரம்ப் கூறிய போது,  “என்னை காட்டிலும் ரஷ்யாவிடம் கடுமையான நடந்து கொண்டவர்கள் யாரும் இல்லை. மேலும் இதற்கிடையில் ரஷ்ய அதிபர் புடினுடன் நல்ல முறையில் உறவில் இருப்பது ஆரோக்கியமான விஷயம். ரஷ்யாவுடன் நல்ல உறவு முறையில் இருப்பது முக்கியமான கடமையும் கூட.

ரஷ்ய அதிபர் புடினுடன் நல்ல முறையில் உறவில் இருப்பது ஆரோக்கியமான விஷயம்

ரஷ்யாவுடனும், சீனாவுடனும் சேர்ந்து இருப்பது நல்ல விஷயம்தான். எதிர்மறையானது கிடையாது.

நாம் இப்போது மிகுந்த சக்தி வாய்ந்த நாடாக இருக்கிறோம். நாம் நமது ஆற்றல் ஏற்றுமதி செய்யும் நாடாக இருக்கிறோம். இது ரஷ்யாவுக்கு சாதகமானதல்ல. ஆனால் அது நிச்சயமாக அமெரிக்காவுக்கு சாதகமான விஷயம்.

நமது ராணுவம் முன்பு இருந்தத்தைவிட பலமானதாக மாறப் போகிறது. இதுவும் ரஷ்யாவுக்கு உகந்த செய்தி அல்ல” என்று கூறினார்.

முன்னதாக அமெரிக்கா - ரஷ்யா தொடர்பான ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட வெள்ளை மாளிகையிலுள்ள ஓவல் அலுவலகத்துக்கு ரஷ்ய அதிபர் புடினை டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து