முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திண்டுக்கல்லில் தி.மு.க.வினர் நடத்திய வன்முறையில் 30 பேருந்துகள் சூறை

வியாழக்கிழமை, 5 ஏப்ரல் 2018      திண்டுக்கல்
Image Unavailable

திண்டுக்கல், - திண்டுக்கல்லில் தி.மு.க.வினர் நடத்திய போராட்டத்தின் போது வன்முறையாளர்கள் அடித்து நொறுக்கியதில் 30 பேருந்துகள் அடித்து நொறுக்கப்பட்டன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சியினர் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். திண்டுக்கல்லில் முன்னாள் அமைச்சரும் தி.மு.க. மாநில துணை பொதுச் செயலாளரும் ஐ.பெரியசாமி தலைமையில் தி.மு.க. காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக கிளம்பிய அவர்கள் அங்கிருந்த தடுப்பு வேலிகளை அடித்து சேதப்படுத்தினர். மேலும் பேருந்து நிலையத்தில் திறந்திருந்த கடைகளையும் அடித்து நொறுக்கினர். கோசம் போட்டபடி சென்ற அவர்கள் அவ்வழியே வந்த அரசு மற்றும் தனியார் பேருந்துகளையும் அடித்து நொறுக்கினர். சாலை ரோட்டில் இருந்து பெட்ரோல் பங்கையும் முற்றுகையிட்டு அதை அடைக்குமாறு சத்தம் போட்டனர். திண்டுக்கல் டவுன் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க.வினர் நடத்திய வன்முறை வெறியாட்டத்தில் 30 பேருந்துகள் சுக்குநூறாக உடைந்தது. கடை முன்பாக இருந்த இருசக்கர வாகனங்களும் அடித்து நொறுக்கினர்.
பேருந்துகள் மீது கல்வீசி தாக்கப்பட்ட போது பயணிகள் அலறியடித்து ஓடினர். மேலும் நகர் முழுவதும் ஊர்வலமாக தி.மு.க.வினர் திண்டுக்கல் வாணிவிலாஸ் பகுதியில் தரையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போலீசார் அவர்களை கைது தனியார் மண்டபத்தில் அடைத்து மாலையில் விடுதலை செய்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து