முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காமன்வெல்த் போட்டியில் இந்தியாவுக்கு 2-வது தங்கம் சஞ்ஜிதா சானு பதக்கம் வென்றார்

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

கோல்டு கோஸ்ட்: காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் சஞ்ஜிதா சானு தங்கப்பதக்கம் வென்றார்.

ஆஸ்திரேலியாவின் கோல்டு கோஸ்ட் நகரில் 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியின் இரண்டாவது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) பளுதூக்குதல் போட்டியின், 53 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் சஞ்ஜிதா சானு தங்கப்பதக்கம் வென்றார்.

சஞ்ஜிதா மணிப்பூரைச் சேர்ந்தவர். இவர் 2014 ஆம் ஆண்டு நடந்த காமன்வெல்த் போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றார்.

காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மகளிருக்கான பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் சஞ்ஜிதா சானு தங்கப்பதக்கம் வென்றார்.

தங்கப்பதக்கம் வென்ற சஞ்சிதாவுக்கு விரேந்திர ஷேவாக், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட வீரர்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காமன்வெல்த் போட்டியில் பளுதூக்குதலில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது தங்கம் இதுவாகும். முன்னதாக வியாழக்கிழமை மகளிருக்கான 48 கிலோ எடைப் பிரிவில் பளு தூக்குதல் போட்டியில் மீராபாய் சானு தங்கமும், ஆடவருக்கான 56 கிலோ பளு தூக்குதலில் இந்தியாவின் குருராஜா வெள்ளிப் பதக்கமும் வென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து