ரஜினியின் ‘காலா’வுக்கு 14 இடங்களில் வெட்டு: தணிக்கை வாரியம் அதிரடி

வெள்ளிக்கிழமை, 6 ஏப்ரல் 2018      சினிமா
Kaala-Karikaalan-2

ரஜினி நடித்துள்ள ‘காலா’ படத்துக்குத் தணிக்கை வாரியம் 14 ‘கட்’ கொடுத்துள்ளது.

ரஜினி நடிப்பில், பா.இரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘காலா’. தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது. இந்த மாதம் 27ஆம் தேதி படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ‘காலா’ படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த தணிக்கை வாரிய அதிகாரிகள், 14 இடங்களில் படத்தை வெட்டச் சொல்லியிருக்கின்றனர். இவ்வளவு ‘கட்’ கொடுத்தும் கூட படத்துக்கு ‘யு/ஏ’ சான்றிதழ் தான் கொடுத்திருக்கிறார்களாம். எனவே, மறுதணிக்கைக்குச் செல்லும் முடிவில் இருக்கிறதாம் படக்குழு.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து