முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா நீதிமன்றத்தில் ஆஜர்

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

டர்பன் நகர்: ஊழல் வழக்கு தொடர்பாக தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமா (75) நேற்று டர்பன் நகர நீதிமன்றத்தில் ஆஜரானார்.

கடந்த 2009 முதல் 2018 பிப்ரவரி வரை தென்னாப்பிரிக்காவின் அதிபராக ஜுமா பதவி வகித்தார். அவரது ஆட்சியில் பல ஊழல்கள் நடைபெற்றதாக புகார் எழுந்தது. ஆளும் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அதனால், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி ஜுமா பதவி விலகினார்.

இந்நிலையில் ஆயுத பேர ஊழல் தொடர்பான வழக்கில் டர்பனில் உள்ள நீதிமன்றத்தில் ஜேக்கப் ஜுமா நேற்று ஆஜரானார். விசாரணைக்குப் பிறகு இந்த வழக்கு ஜூன் 8-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜுமா நிருபர்களிடம் கூறியபோது, நான் நிரபராதி என்று தெரிவித்தார். குற்றம் நிரூபிக்கப்பட்டால், 7 ஆண்டு வரை அவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து