முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டேவிஸ் கோப்பை: பயஸ் புதிய சாதனை

சனிக்கிழமை, 7 ஏப்ரல் 2018      விளையாட்டு
Image Unavailable

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. டேவிஸ் கோப்பை டென்னிஸில் சோனல் லெவல் 2-வது சுற்றில் இந்தியா சீனா அணியை எதிர்கொண்டது. அதில் இரண்டு ஒற்றையர்கள் ஆட்டம் நடைபெற்றது. ஒரு ஆட்டத்தில் ராம்குமார் ராமநாதன் சீனாவின் இளம் வீரரான யிபிங் வு-ஐ எதிர்கொண்டார். இதில் 6-7(4), 4-6 என நேர்செட் கணக்கில் ராம்குமார் தோல்வியடைந்தார். மற்றொரு ஆட்டத்தில் சுமித் நகல், ஷி ஷாங்கை எதிர்கொண்டார். இதில் சுமித் நகல் 4-6, 1-6 என தோல்வியடைந்தார்.

இதனால் இந்தியா 0-2 என பின்தங்கியிருந்தது. நேற்று நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தில் லியாண்டர் பயஸ் - ரோகன்போபண்ணா ஜோடி சீனாவின் மயோ-ஷின் கோங் - டி வு ஜோடியை எதிர்கொண்டது. லியாண்டர் ஜோடி வெற்றி பெற்றது. இதனால் சீனாவுக்கு எதிரான ஆட்டம் சமனில் முடிந்தது. இந்த வெற்றியின் மூலம் லியாண்டர் பயஸ் டேவிஸ் கோப்பையில் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

பயஸ் டேவிஸ் கோப்பையின் இரட்டையர் பிரிவில் இதுவரை 42 வெற்றிகள் பெற்றிருந்தார். இத்தாலியின் நிக்கோலா பைடிரன்கேலியின் சாதனையுடன் சமநிலையில் இருந்தார். நேற்றைய வெற்றியின் மூலம் நிக்கோலா சாதனையை முறியடித்து பயஸ் புதிய சாதனைப்படைத்துள்ளார். பயஸ் 1990-ம் ஆண்டு முதல் முதலாக டேவிஸ் கோப்பையில் தனது பயணத்தை தொடங்கினார். இந்த சாதனை மூலம் பயஸ் டேவிஸ் கோப்பையின் ஹீரோவானார். டேவிஸ் கோப்பையின் கேப்டனான மகேஷ் பூபதியுடன் இணைந்து பயஸ் பல வெற்றிகளை இந்தியாவிற்கு பெற்று தந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து