முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துடன் நேபாள பிரதமர் சர்மா ஒலி சந்திப்பு

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை டெல்லியில்  சந்தித்துப் பேசினார். இரு நாட்டு நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாகவும், ஒருங்கிணைந்து செயல்படுவது தொடர்பாகவும் அவர்கள் இருவரும் விவாதித்தாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேபாள பிரதமராக இரண்டாவது முறை பொறுப்பேற்றுள்ள கே.பி. ஒலிக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார். அதன் தொடர்ச்சியாக, பல முக்கிய விவகாரங்கள் குறித்து இருவரும் ஆலோசித்தனர்.

அப்போது ஜனாதிபதி கூறுகையில், "இந்தியாவுக்கும், நேபாளத்துக்கும் இடையே பூகோளரீதியாக மட்டும் பிணைப்பு இல்லை; மாறாக, கலாசாரம், பண்பாடு, வாழ்வியல் முறைகள், வரலாறு என பல விஷயங்களில் இரு நாடுகளுக்கு இடையே நெருக்கமான பந்தம் உள்ளது' என்றார். ஒலி தலைமையிலான ஆட்சியில் நேபாள மக்களுக்கு சமூக - பொருளாதார நிலையிலான மாற்றங்கள் ஏற்படும் என்றும், அவர்களது வாழ்க்கைத் தரம் மேம்படும் என்றும் நம்புவதாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து