முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் அதிபர் டிரம்ப்பின் 60 மாடி கட்டிடத்தில் தீ விபத்து: ஒருவர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மன்ஹாட்டனில் டிரம்ப் டவர்ஸ் என்ற 60 மாடி கட்டடம் உள்ளது.

இந்த கட்டடத்தின் 50வது மாடியில் இருந்து நேற்று இரவு புகை வெளிவந்தது. தொடர்ந்து தீ மளமளவென பரவியது. தகவலறிந்த தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்படுத்த போராடினர்.இந்த விபத்தில் ஒருவர் பலியானதாகவும், 4 பேர் காயமடைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்பிற்கு சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. தீயை கட்டுக்குள் கொண்டுவந்த தீயணைப்பு துறையினருக்கு அதிபர் டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.


இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து