முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெர்மனியில் பாதசாரிகள் மீது கார் பாய்ந்தது: 4 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 8 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

மியூன்ஸ்டர்: ஜெர்மனியில் பாதசாரிகள் மீது மர்ம நபர் சனிக்கிழமை நிகழ்த்திய கார் பாய்ந்ததில் 4 பேர் உயிரிழந்ததாகவும், ஏராளமானோர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து அந்த நாட்டின் டிபிஏ செய்தி நிறுவனம் கூறுகையில், ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மியூன்ஸ்டர் நகரில், பாதசாரிகள் இடையே தீடீரென்று ஒரு கார் வேகமாகப் புகுந்து, பாய்ந்து சென்றதாகத் தெரிவித்தது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் போலீஸார் உறுப்படுத்தினர். எனினும் இதுதொடர்பான விரிவான விவரங்களை அவர்கள் வெளியிடவில்லை.

இதுகுறித்து காவல்துறையின் சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
மியூன்ஸ்டர் நகரில் கார் தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்துள்ளனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. நாங்கள் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்று சுற்றிவளைத்துள்ளோம். பொதுமக்கள் யாரும் தாக்குதல் பகுதிக்கு வர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று அந்த சுட்டுரைப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.  இதுதவிர, இந்தத் தாக்குதல் குறித்து வதந்திகளையும், யூகங்களையும் பரப்ப வேண்டாம் என்றும் போலீஸார் கேட்டுக்கொண்டனர்.

இது ஒரு தாக்குதல் சம்பவம்தான் என்று போலீஸார் ஊகித்துள்ளதாகவும், எனினும், அதனை உடனடியாக அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையே, பாதசாரிகள் மீது மோதிய காரை ஓட்டி வந்த நபர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நபர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக்கொண்டு இறந்ததாக அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து