முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிரியாவில் அப்பாவி மக்கள் மீது கொடூர ரசாயன தாக்குதல் - வாயில் நுரை தள்ளி ஏராளமானோர் பலி

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

டமாஸ்கஸ் : சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ள கிழக்கு கவுடா பகுதியில் ரசாயன வாயுவை செலுத்தி நடத்தப்பட்ட தாக்குதலில் அப்பாவி குழந்தைகள் உட்பட ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுடா பகுதியை மீட்பதற்காக, அந்நாட்டு அதிபரின் ஆதரவுப் படையினர் இரண்டு மாதங்களாக வான்வழித் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகி உள்ளனர். 1000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்தை அமல்படுத்துவது தொடர்பாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனாலும் அது உரிய முறையில் செயல்பாட்டிற்கு வரவில்லை. தொடர்ந்து அங்கு விதிமுறைகளை மீறி தாக்குதல் நடந்து வருகிறது. . இந்த தாக்குதலில் ஏராளமான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து சிரியாவில் பணியாற்றும் அமெரிக்க மருத்துவ நிவாரண அமைப்பு கூறியுள்ளதாவது:

‘‘கிளர்ச்சியாளர்கள் பகுதியில் ரசாயன தாக்குதல் நடந்துள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் கடும் மூச்சு திணறல் ஏற்பட்டு 49 பேர் உயிரிழந்துள்ளனர். வாயில் நுரை தள்ளி அவர்கள் இறந்துள்ளனர். நுரை தள்ளி உயிரிழந்தவர்களின் வீடியோக்கள் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. உயிரிழப்பு மேலும் அதிகரிக்க கூடும் என தெரிகிறது. ஆயிரக்கணக்கானோர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுள்ளனர்’’ எனக்கூறியுள்ளது.

சர்வதேச சமூகம் தலையிட்டு இந்த கோர தாக்குதலை நிறுத்த வேண்டும் என கிளர்ச்சியாளர்கள் தரப்பில் கோரப்பட்டுள்ளது. ஆனால் இந்த தாக்குதலை சிரியா அரசு மறுத்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து