முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலின் முன்னாள் அதிபர் லுலா போலீஸில் சரணடைந்தார்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

பிரேசிலியா : ஊழல் வழக்கில் 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்ற பிரேசிலின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா போலீஸாரிடம்  சரணடைந்தார். லூலாவை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு பாதுகாப்பாக நின்றிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களிடமிருந்து போலீஸார் லுலாவை பத்திரமாக மீட்டுச் சென்றனர்.

பிரேசிலின் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ (72). இவரது ஆட்சிக் காலத்தில் அரசின் ஒப்பந்தங்களைப் பெற பிரபல கட்டுமான நிறுவனம் ஒன்றுக்கு சட்ட விதிமுறைகளை மீறி சலுகை காட்டியதாக இனாசியோ மீது குற்றம் சுமத்தப்பட்டது. இதையடுத்து, அவர் மீது வழக்கு பதியப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதில், சலுகை காட்டியதற்கு பிரதிபலனாக கடற்கரை ஓரத்தில் லுலாவுக்கு அடுக்குமாடி குடியிருப்பு லஞ்சமாக கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

இந்த வழக்கில் நீதிமன்றம் லுலாவுக்கு 12 ஆண்டுகள் மற்றும் ஒரு மாத சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது. பிரேசிலின் தற்போதைய சட்டதிட்டங்களின்படி சிறை தண்டனை விதித்த பிறகு, அதனை எதிர்த்து மேல்முறையீடு செய்திருந்தாலும் குற்றவாளி உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.

நடப்பாண்டு அக்டோபரில் பிரேசிலில் தேர்தல் நடைபெறவுள்ளநிலையில், லுலாவுக்கு எதிரான இந்த தீர்ப்பு அவரின் அரசியல் வாழ்க்கைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், லுலா தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், அதிபர் தேர்தலில் இனாசியோ போட்டியிட்டால் அவரே வெற்றி பெருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.  தனக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என கோரி உச்ச நீதிமன்றத்திடம் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில் இனாசியோவின் அந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் குழு வியாழக்கிழமை அதனை தள்ளுபடி செய்தது. மேலும், சிறையில் அடைக்கப்படுவதற்காக போலீஸாரிடம் இனாசியோ சரணடைவதற்கு உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை மாலை 5 வரை கெடு விதிக்கப்பட்டது.

எனினும், அந்தக் கெடு முடிந்த பின்னரும் தனது சொந்த ஊரான சாவ் பெர்னாண்டோ டுகாம்போ நகரிலுள்ள தொழிலாளர் சங்கக் கட்டடத்தில் தங்கியிருந்த லுலா இனாசியோவை போலீஸார் கைது செய்ய விடாமல் தடுப்பதற்காக அவரது ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அந்தக் கட்டடத்தை சுற்றிவளைத்திருந்ததால் பதற்றம் நிலவி வந்தது.

இந்த நிலையில், லுலா போலீஸாரிடம் தாமாக முன்வந்து சரணடைந்து தனது தண்டனையின் முதல் நாளை சிறையில் கழித்தார். அவருக்கு கியூரிடிபாவில் பெடரல் போலீஸ் தலைமையகத்தில் 160 சதுர அடி பரப்பளவில் சிறை தயார் செய்யப்பட்டுள்ளது.

பிரேசில் வரலாற்றில் முன்னாள் அதிபர் ஒருவர் ஊழல் வழக்கில் சிக்கி சிறை சென்றது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து