முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நாடு திரும்பும் திட்டத்தை ஒத்திவைத்தார் பர்வேஸ் முஷாரப்

திங்கட்கிழமை, 9 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் (74) நாடு திரும்பும் தனது திட்டத்தை ஒத்திவைத்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவ தலைமைத் தளபதியாக இருந்து, கடந்த 1999-ஆம் ஆண்டில் புரட்சியின் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய முஷாரப், கடந்த 2007-ஆம் ஆண்டு நாட்டில் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார்.
அப்போது, அரசமைப்புச் சட்டத்தை தற்காலிகமாக முடக்கியதுடன், 100-க்கும் மேற்பட்ட நீதிபதிகளை முஷாரப் சிறையில்அடைத்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக, முஷாரப் மீது தேசத் துரோக வழக்கு தொடரப்பட்டு, அவர் மீதான குற்றச்சாட்டு கடந்த 2014-ஆம் ஆண்டு நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சூழலில், மருத்துவ சிகிச்சைக்காக அரசின் அனுமதியுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு துபை சென்ற முஷாரப், அங்கேயே தங்கிவிட்டார். இதையடுத்து அவர் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில், தேசத் துரோக வழக்கு விசாரணையை எதிர்கொள்ள பாகிஸ்தான் வர வேண்டுமென்றால், துளியும் தவறுதலுக்கு இடமில்லாத உறுதியான பாதுகாப்பை வழங்க பாகிஸ்தான் அரசு உறுதியளிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். ஆனால், தற்போதைய அரசு அவருக்கு பாதுகாப்பு வழங்க மறுத்துவிட்டது.

இந்த நிலையில், பாகிஸ்தான் திரும்பும் தனது திட்டத்தை முஷாரப் ஒத்தி வைத்துள்ளார். பாகிஸ்தானில் இடைக்கால அரசு அமையும் வரை தான் நாடு திரும்பப் போவதில்லை என்று முஷாரப் தெரிவித்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து