முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஒப்பந்தத்தை மீறினால் வருத்தப்பட நேரிடும்: அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

டெஹரான்: அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா ஆட்சியில் ஈரானுக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளுக்கும் இடையே 2015 ஜூலையில் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பிறகு, “ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன்” என்று கூறி வருகிறார். மேலும் ஈரான் மீது புதிய பொருளாதார தடைகளையும் விதித்துள்ளார்.
 
இதுகுறித்து ஈரான் அதிபர் ஹசன் ரவுகானி, டெஹரானில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கில் பேசும்போது, ‘‘அணு சக்தி ஒப்பந்த விதிகளை ஈரான் மீறாது. அதேநேரம் அமெரிக்கா ஒப்பந்தத்தை மீறினால் அந்த நாடு வருத்தப்பட நேரிடும். ஒரு வாரத்துக்குள் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும். அமெரிக்கா வின் புதிய அதிபரிடம் நம்பகத்தன்மை இல்லை. ஆரம்பம் முதலே அவர் முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருகிறார். எத்தகைய அச்சுறுத்தலுக்கும் ஈரான் அடிபணியாது’’ என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து