முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய தயாரிப்பு ஏவுகணைகளை வாங்க உலக நாடுகள் ஆர்வம்: நிர்மலா சீதாராமன்

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: இந்தியத் தயாரிப்பு ஏவுகணைகளை வாங்க உலக நாடுகள் அதிக ஆர்வம் காட்டுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

டெல்லியில்  நடைபெற்ற இந்திய தொழிலக கூட்டமைப்பு (சிஐஐ) மாநாட்டில், இதுகுறித்து அவர் பேசியதாவது:
இந்திய ஏவுகணைகளை வாங்க பல நாடுகள் ஆர்வம் தெரிவித்துள்ளன. இதை இந்திய அரசு தனது கவனத்தில் கொண்டுள்ளது. அதேநேரத்தில் நட்பு நாடுகளுக்கு மட்டுமே ஏவுகணைகளை விற்பனை செய்ய வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது.

நமது நாட்டு பாதுகாப்புத் தளவாடத் தயாரிப்புத் திறன் குறித்து விளம்பரப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபடும்படி, வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்களில் பணிபுரியும் பாதுகாப்புத் துறை வல்லுநர்களை நான் கேட்டுக் கொள்ள இருக்கிறேன். அவர்களை விற்பனை பிரதிநிதிகள் போல செயல்பட வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்ளப் போவதில்லை.

இந்தியப் பாதுகாப்புப் படைகளின் திறனை வலுப்படுத்த நாம் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம் என்பது குறித்து எடுத்துரைக்கும்படி கேட்டுக் கொள்ள இருக்கிறேன். இப்படி செய்வதன்மூலம், இந்தியாவில் தயாரிக்கும் பாதுகாப்புத் தளவாடங்கள் மீது உலக நாடுகள் மத்தியில் ஆர்வம் அதிகரிக்கும் என்றார் நிர்மலா சீதாராமன்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து