ரூ.2000 கோடி வாடகை பாக்கி ஐ.பி.எல் நடத்த தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் அனுமதி பெற்றது எப்படி?

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      விளையாட்டு
IPL Ceremony 2018 3 5

சென்னை: தமிழக அரசுக்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் மற்றும் மெட்ராஸ் கிரிக்கெட் கிளப் சுமார் ரூ.2000 கோடி வாடகை பாக்கி வைத்துள்ள நிலையிலும், குத்தகை ஒப்பந்தம் காலாவதியாகிவிட்ட நிலையிலும் கூட அங்கே கிரிக்கெட் போட்டி நடத்த தமிழக அரசு எப்படி அனுமதி கொடுத்தது என்ற கேள்வி எழுந்துள்ளது.

 1965ம் ஆண்டு, இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. முதல் 5 வருடங்களுக்கு, ஆண்டுக்கு ரூ.50,000 வாடகையாக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், 2000மாவது ஆண்டு முதல் 2016வரை ஒப்பந்தம் மாற்றப்படவில்லை. இதனிடையே கடந்த வருடம் சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட சி.ஏ.ஜி அறிக்கையில், சென்னை கிரிக்கெட் மைதானத்திற்காக ரூ.2081 வாடகை பாக்கியுள்ளதாகவும், அதை தமிழக அரசு வசூலிக்க கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறியது.

இதுகுறித்து கிரிக்கெட் சங்க நிர்வாகிகள் சிலர் கூறுகையில், மைதானத்தின் தற்போதைய சந்தை மதிப்பே ரூ.500 கோடிதான். இவ்வளவு அதிக வாடகை கொடுப்பதற்கு மைதானத்தை விலைக்கே வாங்கியிருக்க முடியும். வாடகை விவகாரத்தில் ஏதோ தவறு நடந்துள்ளது என பதிலளித்தனர்.


இந்த நிலையில், ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாத நிலையில், இன்றைய ஐபிஎல் போட்டிக்கு தமிழக அரசு எப்படி அனுமதி வழங்கலாம் என்ற கேள்வி எழுந்துள்ளது. வாடகை விவகாரங்களை சரி செய்துவிட்டு, ஒப்பந்தத்தை புதுப்பித்துவிட்டுதான் அனுமதி கொடுத்திருக்க வேண்டும். ஆனால், ஐபிஎல் நடத்த அனுமதியளித்திருக்க கூடாது என்று, இந்த விவகாரம் பற்றி அறிந்தவர்கள் கூறுகிறார்கள். கிரிக்கெட் சங்கத்தில் உறுப்பினராக உள்ள பெரிய 'தலைகள்தான்' தமிழக அரசை நடவடிக்கை எடுக்க விடாமல் முட்டுக்கட்டை போடுவதாக கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து