முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் ஜெட்லி

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி: மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்த பிறகு அவர் வீடு திரும்பினார்.

நீரிழிவு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ள அருண் ஜெட்லி, சிறுநீரகக் கோளாறு மற்றும் அதனால் ஏற்படும் தொற்றுகளால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த ஒருவாரத்துக்கு மேலாக, அரசு அலுவல்கள் எதிலும் பங்கேற்கவில்லை. மாநிலங்களவை எம்.பி.யாக அவர் அண்மையில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான பதவியேற்பு நிகழ்விலும் கலந்துகொள்ளவில்லை.

வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று வந்த அவர், மருத்துவர்களின் அறிவுரைப்படி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதனிடையே, முதலில் டயாலிசிஸ் சிகிச்சை மூலம் அவருடைய உடல் தொந்தரவுகளை சரிசெய்து விடலாம் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதன்படி, எய்ம்ஸ் மருத்துவமனையில் ஜெட்லிக்கு டயாலிசிஸ் சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை முடிந்து 2 மணி நேரம் கழித்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து