Idhayam Matrimony

உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையில் நீதிமன்றம் தலையிட முடியாது: சுப்ரீம் கோர்ட்

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையில் தலையிட முடியாது என சு்பரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. இது தொடர்பான பா.ஜ.கவின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

மேற்குவங்கத்தில் வரும் மே 1, 3, 5 ஆகிய தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் செய்ய ஏப்ரல் 9-ம் தேதியான நேற்று முன்தினம் கடைசி தேதி ஆகும். இந்நிலையில் மேற்குவங்க பா.ஜ.க சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தது.

அந்த மனுவில், மேற்குவங்க தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தல் உதவி பதிவு அதிகாரிகள் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு வேட்பு மனுக்களை வழங்க மறுக்கின்றனர். பா.ஜ.கவினரை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் தடுக்கின்றனர். அங்கு ஜனநாயகம் படுகொலை செய்யப்படுகிறது. எனவே, வேட்பு மனுக்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யும் வகையில் வெளியிடவும் வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி தேதியை நீட்டிக்கவும் உத்தரவிட வேண்டும். துணை ராணுவத்தை தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால் மற்றும் ஏ.எம்.சாப்ரே ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவில்,

மேற்குவங்க மாநிலத்தில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தேதியை நீட்டிக்க உத்தரவிட முடியாது. மேலும் உள்ளாட்சித்தேர்தல் நடைமுறையில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதேநேரம், அனைத்து வேட்பாளர்களும் மாநில தேர்தல் ஆணையத்தை உடனடியாக அணுகி முறையிடலாம் என கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து