முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முறைசாரா தொழிலாளர்களுக்கு திறன் மதிப்பீடு சான்றிதழ் கலெக்டர் நடராஜன் தலைமையில் ஆலோசணை கூட்டம்

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      ராமநாதபுரம்
Image Unavailable

ராமநாதபுரம்,- ராமநாதபுரம் மாவட்டத்தில் முறைசாரா தொழிலாளர்களுக்கு திறன்மதிப்பீடு சான்றிதழ் வழங்குவது தொடர்பான ஆலோசணை கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில்நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள முறைசாரா தொழிலாளர்களின் திறனை மதிப்பீடு செய்து அங்கீகரித்திடும் வகையில் அரசு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முனைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:- தமிழ்நாடு அரசு முறைசாரா தொழிலாளர்களின் நலனைப் பாதுகாத்திடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  அந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முறைசாரா தொழிலாளர்களின் திறனை தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த நபர்கள் மூலம் மதிப்பீடு செய்து, அவர்களது திறனை  அங்கீகரித்திடும் வகையில் அரசு சான்றிதழ் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கட்டுமான வேலை (கொத்தனார்), கம்பி வளைத்தல், பிளம்பர், கார்பெண்டர், எலக்ட்ரிசியன், டைல்ஸ் கல் பதிப்பவர், பெயிண்டர், கட்டிட வேலை மேற்பார்வையாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபடும் 22ஆயிரம் முறைசாரா தொழிலாளர்கள் உள்ளனர்.  இவர்களது தொழில்திறனை மதிப்பீடு செய்து உரிய சான்றிதழ் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.  முறைசாரா தொழிலாளர்களின்  திறன் குறித்த அங்கீகார சான்றிதழ் வழங்குவதன் மூலம் சம்பந்தப்பட்ட தொழிலாளர்கள் தங்களது திறனுக்கேற்ற வேலைவாய்ப்பு பெறுவதோடு தங்களது பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொள்ள வாய்ப்பாக அமையும். 
முறைசாரா தொழிலாளர்களின் திறன் மதிப்பீட்டிற்கான விண்ணப்பங்கள் மாவட்டத்தில் உள்ள 11 ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வழங்கப்படுகின்றன.  எனவே முறைசாரா தொழிலாளர்கள் தங்களது பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் விண்ணப்பங்களைப் பெற்று பூர்த்தி செய்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சமர்ப்பித்து பயன்பெறலாம். இவ்வாறு பேசினார். இந்த கூட்டத்தில், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ப.மாரியம்மாள், பரமக்குடி அரசினர் தொழிற்ப்பயிற்சி முதல்வர்  ரமேஷ்குமார்,  உள்பட வேலைவாய்ப்புத்துறை அலுவலர்கள், பில்டர்ஸ் அசோசியேசன் ஆப் இந்தியா நிர்வாகிகள்;, தொழிலாளர் நலத்துறை அலுவலர்கள் மற்றும் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து