முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் மதுரை 1 குதிரைவாலி பதப்படுத்துதல் சந்தைப்படுத்துதல் விழா

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

 மதுரை.- மதுரை மாவட்டம், கப்பலூரில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில் மதுரை 1 குதிரைவாலி பதப்படுத்துதல், ஊற்றமேற்றல் மற்றும் சந்தைப்படுத்துதல் விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர்   கொ.வீர ராகவ ராவ் தலைமையில் தமிழ்நாடு திட்டக்குழு உறுப்பினர் - செயலாளர் மற்றும் தலைவர்  .அனில் மிஸ்ரம், துவக்கி வைத்தார். 
 இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர்   பேசும் பொழுது தெரிவித்ததாவது:
 மதுரை மாவட்டத்தில் சிறுதானியங்களை ஊக்கப்படுத்துவதின் முக்கிய நோக்கம் பல சிறப்பான ஊட்டச்சத்து மற்றும் சுவையுடன் கூடிய சத்துள்ள உணவுப்பொருள் என்பதால், சிறுதானியங்களின் உற்பத்தி ஊக்கப்படுத்தப்படுகிறது.  பொதுமக்கள் அரிசியை மட்டுமே வழக்கமாக உணவாக உட்கொண்டு வருகிறார்கள்.  சிறுதானியங்கள் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாததால் பொதுமக்களின் சிறுதானிய பயன்பாடு குறைந்துள்ளது. 
 சிறுதானியங்கள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பட்சத்தில் சிறுதானியங்கள் உற்பத்தி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும்.  வேளாண்மைக்கல்லூரி மற்றும் வேளாண்மைத்துறையின் சார்பில் மானிய விலையுடன் கூடிய பதப்படுத்துதல், சேமித்தல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.  விவசாயிகள் தங்களுக்குள் ஒரு குழு அமைத்து உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு வணிகப்பெயரிட்டு (டீசயனெ யேஅந) மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்தும் பொழுது நல்ல இலாபம் கிடைக்கும்.  மேலும் விவசாயிகள் தற்பொழுது உள்ள நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் விவசாயம் மேற்கொள்ளும் பொழுது அதிக மகசூல் கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தார்.
 இந்நிகழ்ச்சியில் கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் முனைவர்.கு.இராமசாமி, மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் முதல்வர் முனைவர்.சீ.சுரேஷ் உள்ளிட்ட பேராசிரியர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து