தங்கப் பதக்கம் வென்றார் ஹீனா சித்து

செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2018      விளையாட்டு
heenasindhui 2018 04 10

காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்து வருகின்றன. இந்தியா 10 தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்து வரும் நிலையில், நேற்று 25 மீ பிஸ்டல் துப்பாக்கி சுடுதல் போட்டிகள் நடந்தன.

இந்த போட்டியில் இந்தியாவின் ஹீனா சித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் ஏற்கனவே 10 மீ ஏர் ரைபிள் பிரிவில் வெள்ளிப்பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஒரே காமன்வெல்த் போட்டி தொடரில் இரண்டு பதக்கங்கள் வென்ற முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து