முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் காணாமல் போன இந்தியர் குடும்பம் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி உயிரிழப்பு?

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      உலகம்
Image Unavailable

நியூயார்க்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காரில் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 இந்தியர்கள் காணாமல் போன நிலையில் அவர்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி உயிரிழந்ததாக அஞ்சப்படுகிறது.

கேரளாவை சேர்ந்தவர்...
இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப் தொட்டப்பிள்ளி(42). அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள யூனியன் வங்கியில் பணியாற்றிவரும் இவர் தனது மனைவி, குழந்தைகளுடன் வலேன்சியா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், மனைவி சவுமியா(38), மகன் சித்தாந்த்(12), மகள் சாச்சி(9) ஆகியோருடன் தனது காரில் ஆரெகான் மாநிலத்தில் உள்ள போர்ட்லான்ட் நகருக்கு சென்ற சந்தீப், கடந்த வியாழக்கிழமை கலிபோர்னியா நோக்கி திரும்பி கொண்டிருந்தார். வரும் வழியில் சான் ஜோஸ் நகரில் உள்ள உறவினர்களை மறுநாள் (வெள்ளிக்கிழமை) சந்திப்பதாக அவர் தெரிவித்திருந்தார். ஆனால், ஞாயிற்றுக்கிழமை வரை சந்தீப் குடும்பத்தாரை அவரது உறவினர்கள் தொடர்பு கொள்ள இயலவில்லை.

வெள்ளத்தில் மூழ்கி...
இதையடுத்து, காரில் சென்ற சந்தீப் தனது குடும்பத்தாருடன் காணாமல் போனதாக சான் ஜோஸ் நகர போலீசாரிடம் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர். இதற்கிடையில், அருகாமையில் உள்ள ஈல் ஆற்றில் கடந்த வெள்ளிக்கிழமை (6-4-2018) பெருக்கெடுத்து பாய்ந்து, கரை புரண்டு ஓடிய வெள்ளத்தில் கருஞ்சிவப்பு நிறம் கொண்ட ‘ஹோன்டா பைலட்’ கார் ஆற்றில் மூழ்கியதாக அப்பகுதி போலீசார் கண்டுபிடித்தனர். இதனை அடுத்து சந்தீப் குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் வெள்ளத்தில் மூழ்கி இறந்திருக்கலாம் என்ற கோணத்தில் சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து