முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிவரக்கோட்டையில் கோடை இடி தாக்கியதில் மரம் சிதறியது!

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      மதுரை
Image Unavailable

  திருமங்கலம்.- திருமங்கலம் அருகேயுள்ள சிவரக்கோட்டை கிராமத்தில் கோடைஇடி தாக்கியதில் பழமையான வேப்பமரம் வெடித்து சிதறிய போதிலும் அப்பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
திருமங்கலம் தாலுகா சிவரக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்தவர்கள் சிலர் நேற்று முன்தினம் அங்குள்ள உணவகத்தின் பின்புறம் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர்.வெயில் உச்சகட்டத்தை எட்டியிருந்ததால் அவர்கள் அப்பகுதியிலுள்ள பழமையான வேப்பமரத்தின் கீழ் அமர்ந்து ஓய்வெடுத்துள்ளனர்.இந்நிலையில் திடீரென்று அப்பகுதியில் சூறாவளி காற்று அடித்துள்ளது.அந்த சமயத்தில் யாரும் எதிர்பாராத விதமாக கண்ணை பறித்திடும் பயங்கரமான ஒளியுடன் வேப்பமரத்தின் மீது இரண்டு முறை கோடைஇடி விழுந்துள்ளனர்.இதனை முன்கூட்டியே கணித்த ஆடு மேய்ப்பவர்கள் அங்கிருந்து அலறியடித்தபடி ஓட்டம் பிடித்து உயிர் தப்பியுள்ளனர்.இருப்பினும் கோடைஇடி தாக்கிய வேப்பமரம் வெடித்து சிதறி முற்றிலும் நாசமானது.
இதனை நேரில் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கோடைஇடி விழுந்ததால் வெடித்து சிதறிய வேப்பமரத்தை பார்வையிட்டனர்.பின்னர் கோடைஇடி தாக்கியதால் வேப்பமரம் நாசமடைந்த சம்பவத்தை அபசகுனமாக கருதிய மக்கள் அந்த இடத்தில் தீபமேற்றி வழிபாடு நடத்தி தீயசக்திகள் ஏதும் அணுகிடாதபடி வேண்டுதல் செய்தனர். கோடைஇடி தாக்கிய சம்பவத்தால் சிவரக்கோட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து