முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பட்டாசு தொழிற்சாலைக்கு சீல் 4 இலட்சம் மதிப்புள்ள பட்டாசுகள் கைப்பற்றி நடவடிக்கை

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      விருதுநகர்
Image Unavailable

விருதுநகர் - விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு உற்பத்தி தொழிற்சாலைகளில் சமீப காலங்களாக விபத்துக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிர்சேதம் மற்றும் பொருட்சேதம் அதிக அளவில் ஏற்பட்டு வருகிறது. எனவே, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் படி, விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் இயங்கி வரும் பட்டாசு தொழிற்சாலைகளில் விதிமுறை மீறல்களை கண்காணிக்கும் பொருட்டு அனைத்து துணை ஆட்சியர்களும், வட்டாட்சியர்களும் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனடிப்படையில், இன்று(11.04.18) வெம்பக்கோட்டை வட்டாட்சியர் திரு.ராஜகுமார் பட்டாசு தொழிற்சாலைகளை தீடிர் ஆய்வு செய்யும் பணி மேற்கொண்ட போது, வெம்பக்கோட்டை வட்டம் செவல்பட்டி கிராமத்தில் இயங்கி வந்த சரவணா பட்டாசு தொழிற்சாலையின் உரிமையளார் திரு.முருகேசன் என்பவர் இறந்து விட்ட நிலையில், சிவகாசியை சேர்ந்த நடராஜ் என்பவர் குத்தகைக்கு எடுத்து, பட்டாசு ஆலையின் பின்புறம் உள்ள உரிமம் பெறப்படாத 6 அறைகளில் மற்றும் தகர கொட்டகைகள் அமைத்து சட்ட விரோதமாக பட்டாசு உற்பத்தி செய்து வந்ததை கண்டறிந்து, ; உடனடியாக, மேற்படி பட்டாசு உற்பத்தி செய்து வந்த 6 அறைகள் மற்றும் கொட்டகைகளை பூட்டி சீல் வைத்தும், தயார் செய்து வைக்கப்பட்டிருந்த சுமார் 4 இலட்சம் மதிப்புள்ள பட்டாசுகளை கைப்பற்றியும், திறந்த வெளியில் காய வைக்கப்பட்டிருந்த 600 குரோஸ் கருந்திரி மற்றும் 400 குரோஸ் வெள்ளை திரி ஆகியவற்றையும் தண்ணீர் ஊற்றி அழிக்கப்பட்டு வட்டாட்சியரால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு சட்டவிரோதமாக குத்தகை அடிப்படையில் பட்டாசுகள் உற்பத்தி செய்து வந்த குத்தகைதாரர் திரு. நடராஜன் மற்றும் உரிமையாளர் முருகேசன் மகன் திரு.கார்த்திக் ஆகியோர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யவும்,   தொழிற்சாலையின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்வதற்கும் மாவட்ட ஆட்சியருக்கு வெம்பக்கோட்டை வட்டாட்சியர் திரு.ராஜகுமார் அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து