2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி: டோனி

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      விளையாட்டு
dhoni 2018 4 11

சென்னை : 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதை சிறப்பாக உணர்கிறேன் எனவும் இந்த வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது எனவும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி கூறியுள்ளார்.

2-வது வெற்றி...

ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வீழ்த்தி 2-வது வெற்றியை பெற்றது. சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த முதல் ஆட்டத்தில் முதலில் விளையாடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 202 ரன் குவித்தது.

வாட்சன் 2 விக்கெட்டும், ஹர்பஜன்சிங், இம்ரான்தாகீர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 203 ரன் இலக்கை எடுத்து முத்திரை பதித்தது. 19.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சாம்பில்லிங் அதிரடி...

சென்னை அணியின் வெற்றிக்கு புதுமுக வீரர் சாம்பில்லிங்சின் அதிரடியான ஆட்டமே காரணம். இங்கிலாந்தைச் சேர்ந்த அவர் 23 பந்தில் 56 ரன் எடுத்தார். இதில் 5 சிக்சர்களும், 2 பவுண்டரிகளும் அடங்கும். வாட்சன் 19 பந்தில் 42 ரன்னும் (3 பவுண்டரி, 3 சிக்சர்), டோனி 25 ரன்னும் (1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். டாம் 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், பியூஸ் சாவ்லா தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

2 ஆண்டுகளுக்கு பிறகு...

இந்த வெற்றி குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் டோனி கூறியதாவது:-

2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விளையாடுவதை சிறப்பாக உணர்கிறேன். இந்த வெற்றி மகிழ்ச்சியை அளிக்கிறது. முதல் இன்னிங்சிலும் 2-வது இன்னிங்சிலும் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்து இருப்பார்கள். அந்த அளவுக்கு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

மிகுந்த சந்தோ‌ஷம்...

சாம் பில்லிங்ஸ் ஆட்டம் மிகவும் அதிரடியாக இருந்தது. இதே போல கொல்கத்தா அணியும் சிறப்பாக பேட்டிங் செய்தது. இரண்டு அணியின் பந்து வீச்சாளர்களுக்கும் சவாலாக இந்த ஆட்டம் அமைந்தது.  ரசிகர்கள் இந்த ஆட்டத்தில் மிகுந்த சந்தோ‌ஷம் அடைந்து இருப்பார்க்ள. இவ்வாறு அவர் கூறினார்.

11 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த 17 பேருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம்? பொதுமக்கள் கருத்து

Vaara Rasi Palan ( 22.07.2018 to 28.07.2018 ) | வார ராசிபலன் | Weekly Tamil Horoscope

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து