முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனி வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம்:

புதன்கிழமை, 11 ஏப்ரல் 2018      தேனி
Image Unavailable

தேனி, - தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், வீரபாண்டியில் உள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயிலில் சித்திரை பெருந்திருவிழா நடைபெறவுள்ளதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நேற்று மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்திற்குப்பின் கலெக்டர் தெரிவித்ததாவது,
வீரபாண்டி அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் திருவிழாவிற்கு அனைத்து ஏற்பாடுகளும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றது. தேரோடும் சாலைகளை மேடுபள்ளமின்றி தேரின் எடையைத் தாங்கும் வண்ணம் அமைத்திடவும், பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு பணியில் அதிகமான ஆண், பெண் காவலர்களையும், தனியார் பாதுகாப்பு பணியாளர்களையும் பணியில் ஈடுபடுத்திடவும், காவல் கட்டுப்பாட்டு அறை அமைத்து 25 நிலையான மற்றும் கூடுதலாக தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள் மூலமும், உயர் கோபுரம் அமைத்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
 மேலும், பக்தர்கள் கோவிலுக்கு சென்று வர தனித்தனி வழித்தடங்கள் ஏற்படுத்திடவும், அறிவிப்பு பலகைகளை வைத்திடவும், கடைகளை முறைப்படுத்தி அமைத்திடவும், தற்காலிக உணவு தயாரிப்பவர்களுக்கு  தற்காலிகச்சான்றிதழ் வழங்கிடவும், போதுமான அளவு தீயணைப்பு வாகனங்கள், தீத்தடுப்பு சாதனங்கள் தயார் நிலையில் வைத்திடவும், இரண்டு 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் தயார் நிலையில் 24 மணிநேரமும் நிறுத்தி வைத்து மருத்துவ சேவை வழங்கிடவும், தற்காலிக பேருந்து நிலையம் ஏற்படுத்தி மாவட்டத்தில் சிறப்பு பேருந்துகளை இயக்கிடவும், பக்தர்கள் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் வைக்கப்படவும்,  அனைத்து இடங்களிலும் போதுமான மின் விளக்குகள், தற்காலிக கழிவறைகள் தேவையான அளவு ஆங்காங்கே அமைத்திடும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. கோயில் திருவிழாவில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு அடையாள அட்டை மற்றும் உணவு வழங்கிடவும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது என கலெக்டர் தெரிவித்தார்.
 கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், மாவட்ட வருவாய் அலுவலர் கந்தசாமி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பச்சையப்பன் மற்றும் செயல் அலுவலர்கள், அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து