முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கர்நாடகா சட்டசபை தேர்தலில் களமிறக்க டிராவிட், கும்ப்ளேவுக்கு பா.ஜ.க. வலை

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018      இந்தியா
Image Unavailable

பெங்களூரு: கர்நாடக சட்டசபை தேர்தலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ராகுல் டிராவிட் மற்றும் அனில் கும்ப்ளேவை களமிறங்க பா.ஜ.க திட்டமிட்டுள்ளது.

கர்நாடகாவில் மே 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான ஆளும் காங்கிரஸ் கட்சி இறங்கியுள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்காக, காங்கிரஸ் தலைவர் ராகுல் உள்ளிட்டோர் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்பதற்காக, முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா தலைமையிலா பா.ஜ.கவும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான கர்நாடகாவைச் சேர்ந்த அனில் கும்ப்ளே மற்றும் ராகுல் டிராவிட்டை வேட்பாளர்களாக நிறுத்துவதற்கு பா.ஜ.க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக அவர்களிடம் பா.ஜ.க மூத்த நிர்வாகிகள் பேசி வருகின்றனர். ஆனால், இருவரும் எந்த பதிலும் கூறாமல் நழுவி வருகின்றனர்.

இருவரில் ஒருவருக்கு மாநில அரசிலும், மற்றொருவருக்கு மத்திய அரசிலும் பதவி தருவதாகவும் பா.ஜ.க தூண்டில் போட்டு வருகிறது. குறைந்தபட்சம், பா.ஜ.கவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும் என்றும் பேச்சு நடந்து வருகிறது. ஆனால், இவற்றை டிராவிட் மற்றும் கும்ப்ளே மறுத்துள்ளதாகவும், தங்களை விட்டுவிடும்படியும் கூறியுள்ளதாக தெரிகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து