மலேசியாவில் மே 9ம் தேதி தேர்தல்: பிரதமரை வீழ்த்துவாரா? 92 வயது மகாதீர்?

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018      உலகம்
Malayasia 2018 04 12

கோலாலம்பூர்: மலேசிய பொதுத் தேர்தலில் தற்போது அந்த பிரதமர் பதவியில் இருக்கும் நஜீப் ரசாக்கை எதிர்த்து 92 வயதாகும் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது களம் இறங்குவதால் பரபரப்பு கூடியுள்ளது.

கடந்த 2009-ஆம் ஆண்டு முதல் மலேசிய பிரதமராக உள்ளவர் நஜீப் ரசாக். இவர் மீது மக்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனர். விலைவாசி உயர்வு, அரசு நிதியில் பல பில்லியன் டாலர் முறைகேடு உள்ளிட்டவற்றால் பெரும் அதிருப்தியை சந்தித்துள்ளார் நஜீப்.

இந்நிலையில் மலேசிய தேர்தல் வரும் மே 9 -ஆம் தேதி நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. ரசாக்கிற்கு முக்கிய சவாலாக இருப்பது அவரை எதிர்த்து போட்டியிடவுள்ள 92 வயதான மகாதீர் முகமது ஆவார்.


மகாதீர் முகமது கடந்த 1981-ஆம் ஆண்டு முதல் 2003-ம் ஆண்டு வரை பிரதமராக இருந்தவர். நீண்ட காலம் பிரதமராக இருந்த இவர் பின்னர் ஓய்வு பெற்றார். தற்போது முழு வீச்சில் மீண்டும் களம் இறங்கியுள்ளார். தனது மக்கள் நீதி கட்சியின் கீழ் போட்டியிடுகிறார்.

மே 9-ஆம் தேதி 1.5 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். இவர்களில் 10.7 லட்சம் பேர் புதிய வாக்காளர்கள். இவர்களது வாக்கு யாருக்கு கிடைக்கும் என்பது அங்கு பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து