காமன்வெல்த் மல்யுத்த போட்டி: சுஷில் குமார் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை

வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2018      விளையாட்டு
Sushil Kumar hat trick gold 2018 4 12

கோல்டு கோஸ்ட் : ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் மல்யுத்தத்தில் இந்திய வீரர் சுஷில் குமார் ஹாட்ரிக் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

சுஷில்குமார்...

ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் நடந்து வரும் காமன்வெல்த் நேற்றைய போட்டியில், 74 கிலோ ஆடவர் மல்யுத்த போட்டியில் இந்தியாவின் சுஷில்குமார் தங்கம் வென்றார். 74 கிலோ பிரீஸ்டைல் மல்யுத்த பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீரர் சுதில் குமார், தென்ஆப்ரிக்க வீரர் ஜொகன்னஸ் போத்தாவை எதிர்கொண்டார்.  இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சுதில் குமார் 10-0 என்ற புள்ளிகள் அடிப்படையில் தென்ஆப்ரிக்க வீரரை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். இது காமன்வெல்த் மல்யுத்த போட்டிகளில் அவர் தொடர்ச்சியாக வெல்லும் மூன்றாவது பதக்கமாகும்.


3-வது இடத்தில்...

இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. இந்தியா தற்போது வரை, 14 தங்கம், 7 வெள்ளி, 10 வெண்கலம் என மொத்தம் 31 பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தில்  உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து